சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் பெண்ணிடம் பாலியல் வன்முறை

சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் பெண்ணிடம் பாலியல் வன்முறை

1 mins read
ஆஸ்திரேலிய விமானங்களிலும் அதன் விமான நிலையங்களிலும் பாலியல் குற்றங்களுக்கு எள்ளளவும் இடமில்லை: ஆஸ்திரேலியக் காவல்துறை
7b18da11-9f70-41ff-b830-566b618b2cf9
ஆஸ்திரேலிய விமானங்களிலும் அதன் விமான நிலையங்களிலும் பாலியல் குற்றங்களுக்கு எள்ளளவும் இடமில்லை என்று தற்காலிகக் காவல்படை கண்காணிப்பாளர் பீட்டர் பிரின்டல் குறிப்பிட்டார். - படம்: UNSPLASH
Google News Preferred Icon

பெர்த்: சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 13) பயணம் செய்த ஸ்கூட் விமானத்தில், அருகில் அமர்ந்திருந்த மாதை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய 52 வயது இந்திய ஆடவர், விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார்.

பாலியல் குற்றங்களுக்காக அவர்மீது செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆஸ்திரேலியக் கூட்டாட்சிக் காவல்துறையின் தற்காலிகக் கண்காணிப்பாளர் பீட்டர் பிரின்டால் இதன் விவரங்களை ஓர் அறிக்கையில் வெளியிட்டார்.

ஆஸ்திரேலிய விமானங்களிலும் அதன் விமான நிலையங்களிலும் பாலியல் குற்றங்களுக்கு எள்ளளவும் இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

விமானப் பயணத்தின்போது ஆடவர் அப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளார்.

அதுபற்றி விமானச் சிப்பந்திகளிடம் மாது தெரியப்படுத்தியதும் அவருக்கு மாற்று இருக்கை வழங்கப்பட்டது என்று திரு பீட்டர் தெரிவித்தார்.

விமானம் பெர்த் நகரை அடையும்வரை சிப்பந்திகள் ஆடவரின் நடவடிக்கைகளை கண்காணித்து, ஆஸ்திரேலிய காவல்துறையிடம் தெரிவித்து, விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியச் சட்டப்படி, பாலியல் வன்முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அனுமதியற்ற அநாகரிகச் செயலில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஏழு ஆண்டுச் சிறை கூடுதலாக வழங்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்