வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தின் இரவு நேரப் பொழுதுபோக்கிற்குப் பிரபலமான ஒரு பகுதியில் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
“ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து அயோவா நகரக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பலருக்குச் சிகிச்சை அளிக்க, அவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த தகவல் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

