தைப்பே: தைவானை நெருங்கி வரும் சம்பி சூறாவளியால் தலைநகர் தைப்பே வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கில் அங்கு செல்லும் விமானச் சேவைகள் ரத்தாகியுள்ளன.
சூறாவளி, கரையைக் கடந்து தைவானுக்குள் வந்தடையும் வேளை அது வலுவிழந்துவிடும் என்று கணிக்கப்பட்டாலும் பலத்த காற்று வீசும் என்று அந்நாட்டு மத்திய வானிலை நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது. ஆகவே அங்கு பாதுகாப்புக் கருதி பல முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தைவானின் நிதிச் சந்தையுடன் அங்குள்ள பள்ளிகள் வெள்ளிக்கிழமை மூடப்படும். அதன் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென் தீவுகளில் மட்டும் பள்ளிகளும் அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் தைவானின் போக்குவரத்து அமைச்சு, அதன் 262 உள்ளூர் பயணங்களுடன் 350 அனைத்துலக விமானப் பயணங்களையும் ரத்து செய்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) அதே நாளுக்கான அதன் நான்கு சேவைகளையும் மலிவுக் கட்டண நிறுவனமான ஸ்கூட் அதன் 10 பயணங்களையும் ரத்து செய்தன. அதன் விவரங்களை இரு நிறுவனங்களும் வியாழக்கிழமை அறிக்கை வழியாகத் தெரிவித்தன.
