சீனாவில் சிறாரைவிட மூத்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் சிறாரைவிட மூத்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

படம்: இபஏ

28 Oct 2026 - 8:05 pm

1 mins read

ஹாங்காங்: சீனாவில் வேகமாக மூப்படையும் மக்கள்தொகை, குறைந்துவரும் பிறப்பு விகிதம் ஆகியவற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

அந்நாட்டில் தற்போது சிறாரைவிட 65 வயதை எட்டிய முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீனாவின் தேசியப் புள்ளிவிவரக் கழகத் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசாங்கச் செய்தி ஊடகமான இசாய் செய்தி வெளியிட்டுள்ளது.

மூத்தோரின் சார்பு விகிதமானது கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் 15 விழுக்காடாக இருந்த அந்த விகிதம் 2021ல் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்தது.

தற்போது, சீனாவில் 65 வயதை எட்டிய மூத்தோர் 223 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர். ஆனால், 14 வயதும் அதற்குக் குறைந்த வயதுமுடைய சிறார் 213 மில்லியனாக உள்ளனர்.

பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்குச் சரிந்ததால், 2025ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாகச் சீனாவின் மக்கள்தொகை குறைந்தது.

1980ஆம் ஆண்டுக்கும் 2025க்கும் இடையில் சீனாவில் நடப்பில் இருந்த ‘ஒரு குழந்தை’க் கொள்கையும் நகரமயமாவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதும் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாகக் குறைந்ததற்கு முக்கியக் காரணங்கள்.

குறிப்புச் சொற்கள்