பெல்ஜியத்தில் கொல்லப்பட்ட சிங்கப்பூர் மாணவர்: சந்தேக நபரின் காவல் நீட்டிப்பு

1 mins read
18a03f91-05f8-4fb0-8eca-aa66cbe6d33c
சிங்கப்பூர் இளையர் அரவிந்த் பிள்ளை தனியாக இருந்த நேரத்தில் அவரை அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும் அணுகியதாகக் கூறப்பட்டது. - படங்கள்: அரவிந்த் பிள்ளை குடும்பத்தினர், NIEUWBLAD

பிரசல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் 25 வயது சிங்கப்பூர் மாணவர் அரவிந்த் பிள்ளை நவம்பர் 7ஆம் தேதி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

 பிரசல்ஸ் நகர மையத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பில், 18 வயது இளையர்கள் இருவரை அடையாளம் கண்டு, அந்நாட்டு காவல்துறை கைது செய்தது.

அவர்கள் இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இருவரின் காவலும் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெல்ஜிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நவம்பர் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவரது வழக்கு விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல் ஒரு மாதத்திற்கு நீதிபதி நீட்டித்ததாக அந்நாட்டு ஊடகமான புரூஸ் செய்தி நிறுவனம் கூறியது.

மற்றொருவர் நவம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் அவருடைய காவலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

அவர்கள் இருவரும் அரவிந்த் பிள்ளையின் அடிவயிற்றில் கத்தியால் குத்தினர் என்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று. பிரசல்ஸ் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அந்நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்ட்ராட் பகுதியிலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு உதவிகோரி காவல்துறை அழைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்