சைக்கிளோட்டியின் மரணத்தை விளைவித்த சிங்கப்பூரருக்குச் சிறை: பெர்த்

சைக்கிளோட்டியின் மரணத்தை விளைவித்த சிங்கப்பூரருக்குச் சிறை: பெர்த்

படம்: 9நியூஸ்

02 Nov 2026 - 9:33 pm

1 mins read

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சைக்கிளோட்டி ஒருவர்மீது காரைக் கொண்டு மோதிய சிங்கப்பூரருக்கு ஐந்து ஆண்டுகள், ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு நேர்ந்த சைக்கிளோட்டி விபத்தில் மாண்டதைத் தொடர்ந்து 29 வயது இங் ஜிங் காய், ஆகஸ்ட் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் இங்குக்கான தீர்ப்பைத் திங்கட்கிழமை (நவம்பர் 2) விதித்தது.

இங், 2024ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி கைதானர். அன்றிலிருந்து அவர் ஆஸ்திரேலியாவின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதே ஆண்டு ஜூன் 21ஆம் தேதி, இங்மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றம் பின்னர் தளர்த்தப்பட்டது.

2024ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி குடும்பத்துடனும் நண்பர்களுடனும் விடுமுறைக்காக பெர்த் வந்த இங், தமது காதலியைக் கரம்பிடிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் கணித ஆசிரியரான இங், கார்லிஸ்லே என்ற பகுதியில் சாம்பல் நிற கியா கார்னிவல் காரை ஓட்டிச்சென்றார்.

மே 24ஆம் தேதி, பிற்பகல் 1.45 மணியளவில் சம்பவம் நேர்ந்தது. மின்சைக்கிளை ஓட்டிய பார்க் ஜான் பெர்ன்ஸ் என்ற ஆடவர் இங்கின் காரிலிருந்து விலையுயர்ந்த பொருள்கள் கொண்ட பையைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

பர்ன்சை இங் காரில் துரத்திச் சென்றபோது காரின் சக்கரத்தில் பர்ன்ஸ் விழுந்தார். அதையடுத்து கிட்டத்தட்ட 25 மீட்டருக்கு இங் காரை ஓட்டிச்சென்றார்.

குறிப்புச் சொற்கள்