தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து வெள்ளத்தில் அறுவர் மாண்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

1 mins read
4eba3c94-4b02-4a1b-83ed-b1b40cfd526f
டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கிய வெள்ளம், 70,000க்கும் அதிகமான வீடுகளைப் பாதித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தெற்குத் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் உயிர் இழந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கிய வெள்ளத்தில், சத்துன், சொங்க்லா, பட்டாணி, யாலா, நராத்திவாட் ஆகிய மாநிலங்களில் 70,000க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டார அதிகாரிகள் கூறினர்.

நராத்திவாட்டில் 89 வயது மாது, ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிர் இழந்ததாக மாநிலத் துணை ஆளுநர் ப்ரீச்சா நுவால்நொய் சொன்னார்.

பல நாள்கள் நீடித்த கடும் மழையைத் தொடர்ந்து மேலும் ஒருவரை இன்னும் காணவில்லை. அந்த மழையால் சில இடங்களில் வெள்ளநீர் 3 மீட்டர் உயரம்வரை எட்டியதாக அவர் கூறினார்.

சாலைகள் சேற்றில் மூழ்கியிருந்ததையும், குடியிருப்பாளர்கள் கூரைகளில் அடைக்கலம் நாடியதையும் உள்ளூர் ஊடகங்களின் காணொளிகள் காட்டின.

மீட்புக் குழுக்கள் இரவு முழுதும் பணியாற்றி தண்ணீர் போத்தல்களையும் நொறுக்குத் தீனிகளையும் வழங்கின. அவை உயிருடற் சேதங்களுக்குக் கட்டடங்களையும் சோதித்தின.

டிசம்பர் 27ஆம் தேதி காலை நிலவரப்படி, நீர் அளவு குறைந்திருப்பதாக தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு மீட்புப் பிரிவு தெரிவித்தது.

தாய்லாந்தின் பொதுச் சுகாதார அமைச்சு வெள்ள நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாக பொதுச் சுகாதார அமைச்சர் சொல்நான் ஸ்ரீகேயு கூறினார்.

குறிப்புச் சொற்கள்