தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
டிரம்ப் பதவிக்காலத்தில் அமெரிக்காவைவிட்டு வெளியேற முனைவோருக்குத் தீர்வு

உல்லாசக் கப்பலில் நான்கு ஆண்டுகள் உலகப் பயணம்

1 mins read
4b2ae239-46bb-4b56-9405-e1b06016fdcc
இந்தக் கப்பல், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 140 நாடுகளில் 425க்கும் மேற்பட்ட துறைமுகங்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும். - படம்: ராய்ட்டர்ஸ்

ஃபுளோரிடா: அமெரிக்காவின் அடுத்த அதிபராக டோனல்ட் டிரம்ப் தேர்வானதைத் தொடர்ந்து, அதிகமான அமெரிக்கர்கள் நாட்டைவிட்டு வெளியேற முனையும் வேளையில், அமெரிக்காவைச் சேர்ந்த உல்லாசக் கப்பல் நிறுவனம் ஒன்று அதற்கு தீர்வு வழங்குகிறது. ஆனால், அதற்கு மிகுந்த செலவாகும்.

டிரம்ப் அதிபராக தேர்வுசெய்யப்பட்ட அடுத்த நாளான நவம்பர் 7ஆம் தேதி, Villa Vie Residences எனும் அந்தக் கப்பல் நிறுவனம் உலகம் முழுவதும் பயணிகளை அழைத்துச் செல்லும் நாலாண்டுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது.

கப்பலில் இருவர் தங்குவதற்கான அறைக்கு பயணிகள் ஆளுக்கு US$159,999 (S$215,300) செலுத்த வேண்டும். ஒருவர் தங்கும் அறைக்கான கட்டணம் US$255,999.

இந்தக் கப்பல், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 140 நாடு[Ϟ]களில் 425க்கும் மேற்பட்ட துறை[Ϟ]முகங்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும்.

பெருங்கடலைப் பார்க்கும் வசதிகொண்ட அறையில் அவர்கள் தங்க வைக்கப்படுவர். மூன்று வேளை உணவு, இரவு உணவில் இலவச பீர், ‘வைன்’, கப்பலில் உள்ள உடற்பயிற்சிக்கூடம், [Ϟ]‘ஸ்பா’ போன்ற வசதிகள் வழங்கப்[Ϟ]படும்.

இதுபோக வைஃபை இணையச் சேவை, மருத்துவ வசதி, வாரத்திற்கு ஒருமுறை அறையைச் சுத்தப்படுத்தும் சேவை, இரு வாரங்களுக்கு ஒருமுறை துணிமணிகளைத் துவைத்துத் தரும் சேவை போன்றவையும் வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 600 பேர் வரை தங்கும் வசதியைக் கொண்ட Villa Vie Odyssey கப்பல், உலகம் முழுவதும் அதன் 15 ஆண்டுகால சுற்றுப்பயணத்தில் தற்போது இரண்டாம் ஆண்டில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்