தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அரசியல் வட்டாரம் ஆவலுடன் எதிர்பார்க்கும் சந்திப்பு

அமெரிக்க அதிபரைச் சந்திக்கிறார் தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்

1 mins read
cd865614-f75b-42c8-8f30-df67a9b7201d
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் (இடது) அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பை சந்திக்கிறார் - படம்:இணையம்

வாஷிங்டன்: தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25 ) அன்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெறும் இந்த சந்திப்பு பல்வேறு காரணங்களுக்காக அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சந்தித்தால் என்னவெல்லாம் தம்மால் செய்ய இயலும் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

‘‘நாட்டு மக்களின் நலன் மேம்படும் என்றால் அதற்காக டிரம்பின் கால்களுக்கு இடையில் ஊர்ந்து செல்வதற்கு கூடத் தயங்கமாட்டேன்,’’ என்று சொல்லியிருந்தார் திரு லீ.

அதேபோல இம்முறை பதவிக்கு வருவதற்கு முன்பதாக அவர்கள் இருவரும் படுகொலைத் தாக்குதல்களிலிருந்து உயிர்பிழைத்தவர்கள்; மேலும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்திப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளவர்கள்.

இந்தச் சூழலில் இவர்கள் இருவரும் நேரடியாகச் சந்திக்கவுள்ளதால், இந்தச் சந்திப்பு அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.

முன்னதாகத் திரு டிரம்ப், திரு லீ சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான பொருளியல் ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வர்த்தகத்தை வலுப்படுத்துதல் முதலீட்டுத் திட்டங்கள்குறித்து பல்வேறு முக்கிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இருநாட்டு செய்திகுறிப்புகள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்