இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ள தென்கொரியக் கடைகள்

இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ள தென்கொரியக் கடைகள்

2 mins read
bf64c084-0a37-4d42-8ea1-a06d65cfe81b
 ‘பாரிஸ்’ (Baris) என்று பெயரிடப்பட்ட இயந்திர மனிதரின் கை ஒன்று, அமெரிக்கானோ, மட்சா லட்டே போன்ற காப்பி வகைகளைக் குவளைகளில் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியக் கடைகளில் இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, காப்பிக் கடைகள், ராமென் உணவகங்கள், பூக்கடைகளில் இயந்திர மனிதர்கள் அதிகமாக உள்ளன.

அதிகரித்து வரும் ஊழியர்களின் செலவினங்களைச் சமாளிக்க, கடை உரிமையாளர்கள் இயந்திர மனிதர்களையும், சுயசேவை கருவிகளையும் நாடி வருகின்றனர்.

பொதுவாக 24 மணி நேரமும் திறந்திருக்கும் இத்தகைய கடைகளின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு இறுதியில் 9,000ஐ எட்டியதாக தென்கொரியாவின் தேசிய தீயணைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘சாம்சுங் கார்ட்’ பணம் செலுத்தும் சேவை நிறுவனம், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் இயந்திர மனிதர்கள் உள்ள கடைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

“20 வயதில் உள்ள பரிஸ்டாஸ்(baristas) எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்து வருகிறது,” என்று ‘லவுஞ்ச் எக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் டோங்ஜின் தெரிவித்தார்.

‘லவுஞ்ச் எக்ஸ்’ கடைகளில் உள்ள சுயசேவை கருவிகளால் (kiosks) வாடிக்கையாளர்கள் தங்களது காப்பிகளைத் தேர்வு செய்கிறார்கள். அதன்பின்னர் ‘பாரிஸ்’ (Baris) என்று பெயரிடப்பட்ட இயந்திர மனிதரின் கை ஒன்று, அமெரிக்கானோ, மட்சா லட்டே போன்ற காப்பி வகைகளைக் குவளைகளில் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

திரு கிம்மின் ஊழியர்கள் எவருமே இல்லாத, 24 மணி நேரமும் இயங்கும் எட்டுக் காப்பிக் கடைகளை நடத்தி வருகிறார். இவற்றில் நான்கு கடைகள் தலைநகர் சோலில் அமைந்துள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் காசாளர்கள் இல்லாத பேரங்காடிகள் இருப்பது போல, தென்கொரியாவில் ஊழியர்கள் இல்லாத பலவகை கடைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

தென்கொரியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருப்பதால், அங்குச் சிறு திருட்டுகளின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதனால் கடை உரிமையாளர்களும் இயந்திர மனிதர்களை நாடத் தொடங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்