தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரட்டை பாண்டா கரடிக்குட்டிகளை வரவேற்கும் தென்கொரியா

1 mins read
eebb63b7-37d2-4f62-931b-49fee6b65f48
இரண்டு பாண்டா கரடிக்குட்டிகளும் தலைநகர் சோலுக்கு அருகில் உள்ள எவெர்லாண்டு கேளிக்கைப் பூங்காவில் பிறந்தன. - படம்: இபிஏ

சோல்: தென்கொரிய விலங்கியல் தோட்டம் ஒன்று அண்மையில் அங்குப் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா கரடிக்குட்டிகளை வரவேற்றுள்ளது.

அந்த இரண்டு கரடிக்குட்டிகளும் தலைநகர் சோலுக்கு அருகில் உள்ள எவெர்லாண்டு கேளிக்கைப் பூங்காவில் பிறந்ததாக அவ்விலங்கியல் தோட்டம் காணொளி வழியாகக் கூறியது.

பாண்டா கரடிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்கு அழைப்பு விடுக்க இது நல்லதொரு தருணம் என்று விலங்கியல் தோட்டத்தின் தலைவர் சுங் டொங் ஹீ கூறினார்.

சீனா நல்லெண்ண அடிப்படையில் 1950களிலிருந்து பாண்டா கரடிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது.

தென்கொரியாவில் முதன்முதலில் கிட்டத்தட்ட மூவாண்டுகளுக்கு முன்னர் ‘ஃபு பாவ்’ பாண்டா கரடி பிறந்தது. அதன்பிறகு ‘ஃபு பாவ்’இன் பெற்றோருக்கே பிறந்த இரட்டை பாண்டா கரடிகள் இவை.

‘ஃபு பாவ்’ அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவுக்குத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று தென்கொரிய விலங்கியல் தோட்டம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்