எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மாபெரும் சக்தி வாய்ந்த ஏவுகணையை விண்ணில் பாய்ச்சவுள்ளது.
கிட்டத்தட்ட 120 மீட்டர் உயரம் கொண்ட அந்த ஏவுகணையின் பெயர் ஸ்டார் சிப் என்று அழைக்கப்படுகிறது.
சாதாரணமாக விண்ணில் அனுப்பப்படும் ஏவுகணையை விட இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
ஸ்டார்சிப் பறக்க 33 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை (ஏப்ரல் 17) காலை 8 மணி வாக்கில் டெக்சஸ் மாநிலத்தில் இருந்து ஏவுகணை பாய்ச்சப்படும் என்றும் அது பூமியை ஒரு சுற்று சுற்றி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏவுகணை பாய்ச்சப்படுவதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கல்ப் ஆப் மெக்சிக்கோ கடற்கரைகளில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

