ஸ்பெயின் ரயில் விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 68ஆக அதிகரிப்பு

ஸ்பெயின் ரயில் விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 68ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு
படம்: ஏஎஃப்பி

29 Oct 2026 - 12:09 pm

1 mins read

உர்டா: ஸ்பெயினின் காஸ்டில்லா-லா மாஞ்சா வட்டாரத்தில் புதன்கிழமை (அக்டோபர் 28) இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.

மட்ரிட் நகரிலிருந்து செவில் நோக்கிய வழித்தடத்தில் நின்றுகொண்டிருந்த ஐரியோ நிறுவனத்தின் ரயிலின் பின்புறத்தில் ரென்ஃபே நிறுவன ரயில் மோதியது.

தானியங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட கோளாற்றால் ரயில்கள் நிறுத்தப்பட்டன என்றும் பின்னர் சரியான காரணமின்றி மீண்டும் ரயில்களை இயக்க அனுமதித்ததே விபத்துக்குக் காரணம் என்றும் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கர் பியுன்டே தெரிவித்தார். இதனையடுத்து, நாட்டின் ரயில் கட்டமைப்புத் பாதுகாப்புத் தொடர்பில் புதிய ஐயங்கள் எழுந்துள்ளன.

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உறவினர்களிடம் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இரவு முழுவதும் அவசரகாலச் சேவைக் குழுக்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டோரைத் தேடும் பணியில் ஈடுபட்டதைக் காண முடிந்ததாக ஏஎஃப்பி செய்தியாளர் கூறினார்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் நாடு முழுவதும் மூன்று நாள்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஸ்பெயினில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய ரயில் விபத்து இதுவாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்