சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி

சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி

1 mins read
7ecb5eda-fa24-47a7-8392-e0f3bac9fa8c
2024ஆம் ஆண்டில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுக் கூட்டத்தில், சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்துகொண்ட செய்திக் காட்சி ஒன்று பிரம்மாண்ட திரையில் காண்பிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற ஜியாங் ஸெமினின் 100வது பிறந்தநாளை அனுசரிக்க, அதிபர் ஸி ஜின்பிங் தலைமையில் மக்கள் மாபெரும் அரங்கில் முன்னணி அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்றது.

திரு ஜியாங் ஒரு சிறிய பொருளியலாக இருந்த சீனாவை உலகளவில் உயர்த்தினார். 1989ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்கப் போராட்டத்திற்குப் பிறகு, அனைத்துக் குறைகூறல்களையும் கடந்து, பத்தாண்டுக் காலகட்டத்தில் சீனாவை அதிவேகப் பொருளியல் வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற அவர், தமது 96ஆம் வயதில் 2022ஆம் ஆண்டில் காலமானார்.

அவருடன் இணைந்து ஆட்சியை நடத்திய முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி சென்ற வாரம் காலமானார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

திரு ஜியாங் ஸெமின் விட்டுச்சென்ற கொள்கைகளைக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று அதிபர் ஸி திங்கட்கிழமை ஆற்றிய 40 நிமிட உரையில் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், அவரது அரசியல், சித்தாந்தத் திட்டத்தின் தொடர்ச்சியே தற்போதைய தலைமைத்துவம் என்பதையும் திரு ஸி சுட்டிக்காட்டினார்.

அந்தச் செய்தி, கடந்த சில நாள்களாக அரசாங்க ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்