ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இலங்கை அதிபர் உத்தரவு

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இலங்கை அதிபர் உத்தரவு

1 mins read
136e6417-9abc-4c5c-a6b3-6cb1cdf1e9f9
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு பற்றி ‘சேனல் 4’  அண்மையில் வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராகச் சமூக ஆர்வலர்கள் மௌனப் போராட்டம் நடத்தினர். - படம்: இபிஏ

கொழும்பு: இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் நாளில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சே குடும்பத்துக்கு விசுவாசமான அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகப் பிரிட்டனின் ‘டைம்ஸ்’ சஞ்சிகை அண்மையில் செய்தி வெளியிட்டது.

இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சஞ்சிகை வெளியிட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு அதிபர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

மூத்த ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியான சுரேஷ் சாலி மீது 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் நாளில் நடந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டார் என ‘டைம்ஸ்’ சஞ்சிகை குற்றஞ்சாட்டியுள்ளது எனவும் அதை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்துள்ளதாகவும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.

கடந்த வாரம் வெளியான காணொளியில் 2019ஆம் ஆண்டு மூன்று தேவாலயங்களிலும் மூன்று உணவு விடுதிகளிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ‘ஈஸ்டர் சண்டே’ குண்டுவெடிப்புத் தாக்குதலில் 45 வெளிநாட்டினர் உட்பட 279 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக அந்தக் காணொளியில் சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்