டெங்கியை எதிர்த்து இலங்கையின் முப்படைகளும் போராடும்: அதிபர்

டெங்கியை எதிர்த்து இலங்கையின் முப்படைகளும் போராடும்: அதிபர்

1 mins read
கொசுக்களுக்கு எதிரான நாடுதழுவிய நடவடிக்கை
cccc9c52-c8d8-4713-80b2-3eb97e59a55d
இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் அண்மையில் குடியிருப்புகளில் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கொழும்பு: கட்டுக்கடங்காமல் நாடு முழுவதும் பரவிவரும் டெங்கியை எதிர்த்து இலங்கை ராணுவத்தின் முப்படைகளும் கொசுக்களுக்கு எதிரான போராட்டத்தில் களமிறக்கப்படும் என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளார்.

அன்றாடம் மருத்துவமனைகளில் 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் டெங்கி தொற்றால் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொசுக்களின் இருப்பிடங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக அழிக்கும் சிறப்புப் படையுடன் ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைவார்கள் என்று அதிபர் கூறினார்.

கடுமையான காய்ச்சல், குமட்டல், வாந்தி, தசைவலி போன்றவற்றுடன் சில நேரங்களில் ரத்தக் கசிவினால் மரணத்தையும் டெங்கி காய்ச்சல் ஏற்படுத்தும்.

மாண்டோர் எண்ணிக்கை

இவ்வாண்டு மட்டும் இலங்கையில் 50,000 நோயாளிகளுக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 29 பேர் இதுவரை மரணமடைந்துவிட்டனர்.

கடந்த 2017ல் 186,000 பேர் டெங்கியால் மாண்டனர். அதைவிட தற்போதைய எண்ணிக்கை பலமடங்கு குறைவானதாக இருந்தாலும் அரசாங்கம் அதன் எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

கொசுக்கள் வாழிடங்களுக்கு எதிரான நாடுதழுவிய சுகாதாரச் செயல்திட்டம் புதன்கிழமை (ஜூன் 24) முதல் மேற்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்