தோக்கியோ: மத்திய ஜப்பானில் எட்டுப் பேரைக் கத்தியால் குத்தியதுடன் ரசாயன திரவத்தை ஊற்றி ஏழு பேரைக் காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
தோக்கியோவுக்கு மேற்கில் உள்ள ஷிசுவோகா மாநிலத்தின் மிஷிமா நகரில் உள்ள யோகோஹாமா ரப்பர் தொழிற்சாலையில் இச்சம்பவம் நேர்ந்தது.
கத்தியால் குத்தப்பட்டவர்களும் பிளீச்சால் காயமடைந்தோரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கத்தியால் குத்தப்பட்டோரில் ஐவரின் நிலை மோசமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
தாக்குதல் நடத்திய நபர் 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும் ஷிசுவோகா மாநிலக் காவல்துறை குறிப்பிட்டது.
ஆடவர் தொழிற்சாலையுடன் தொடர்புடையவர் என்று தெரிவித்த அஸாஹி ஷிம்புன், ஆடவர் முகமூடி அணிந்திருந்ததாகக் கூறியது.
ஜப்பானிய செய்தி நிறுவனமான என்ஹெச்கெ தாக்கப்பட்டோர் அனைவரும் சுயநினைவுடன் இருப்பதாகக் குறிப்பிட்டது.

