மணிலா: பிலிப்பீன்சை சக்தி வாய்ந்த மான் யி புயல் நவம்பர் 17ஆம் தேதி உலுக்கியது.
புயல் காரணமாகப் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அதுமட்டுமல்லாது, மின்கம்பங்கள் விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.
மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் சீறிய மான் யி புயல், நவம்பர் 16ஆம் தேதியன்று கடான்டுவானேஸ் தீவில் கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடப்பதற்கு முன் 60,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
மான் யி புயல் காரணமாக உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்று பிலிப்பீன்ஸ் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், யாரும் மரணம் அடையவில்லை என்று நவம்பர் 17ஆம் தேதியன்று மாநிலப் பேரிடர் நிர்வாகப் பிரிவுத் தலைவர் ரொபேட்டோ மொன்டெரோலா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகரங்கள் சேதமடைந்துள்ளதாக திரு மொன்டெரோலா தெரிவிதத்தார்.
தற்போது அப்பகுதிகளில் பலத்த காற்று, கனமழை இல்லை என்றார் அவர்.
இலேசான மழைத் தூறல் மட்டும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

