யங்கூன்: மியன்மார் அரசாங்கத் துடன் அமைதிப்பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ரோஹிங்யா போராளிகள் அறிவித் துள்ளனர். போராளிகள் அறிவித் திருந்த ஒரு மாத கால சண்டை நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சண்டையால் பாதிக் கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருட்கள் விநியோகிப்பதற்கு ஏதுவாக போராளிகள் அந்த சண்டை நிறுத்தத்தை அறிவித் தனர். அந்த சண்டை நிறுத்தம் வரும் திங்கட்கிழமை இரவு முடிவுறும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அரகான் ரோஹிங்யா மீட்பு ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் போலிஸ் சாவடி கள் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
பங்ளாதேஷில் உள்ள முகாமில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

