60,000 பேர் நிரம்பிய கூட்டத்தில் சந்தேக நபரை அடையாளம் காட்டிய கேமராக்கள்

60,000 பேர் நிரம்பிய கூட்டத்தில் சந்தேக நபரை அடையாளம் காட்டிய கேமராக்கள்

fallback

16 Apr 2018 - 4:54 am

1 mins read

நன்சாங்: முகத்தை ஒப்பிட்டுக் காட்டும் புதிய தொழில்நுட்பம் சீனாவில் குற்றச் சம்பவ சந்தேக நபரைப் பிடிக்க உதவி உள்ளது. ஏவோ என்றழைக்கப்படும் அந்த 31 வயது ஆடவர் ஜியாங்ஸி மாநிலத்தின் ஸாங்‌ஷு நகரைச் சேர்ந்தவர். நிதி சர்ச்சை ஒன்றின் தொடர்பில் போலிசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இம்மாதம் 6ஆம் தேதி தமது மாநிலத்தில் உள்ள நன்சாங் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பெரிய தொரு இசை நிகழ்ச்சிக்குத் தமது மனைவியுடனும் ஏராள மான நண்பர்களுடனும் புறப்பட்டுச் சென்றார். புகழ்பெற்ற ஹாங்காங் பாடகரின் இசை நிகழ்ச்சி நன்சாங் அனைத்துலக விளையாட்டரங்கில் மறுநாள் சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற 60,000 பேரில் ஏவோவும் ஒருவர். அத்தனை பேர் நிரம்பிய அரங்கில் ஏவோவை மட்டும் போலிஸ் குழுவினர் நெருங்கி கைது செய்தனர். அதில் அவருக்கும் ஆச்சரியம்தான். அவர் பிடிபட்ட விதத்தை நன்சாங் நகரின் ஹோங்குட்டன் காவல் நிலைய அதிகாரி லி ஜின் விளக்கினார். "இசை அரங்கின் நுழைவு வாயிலில் ஏராளமான கேமராக்களைப் பொருத்தி இருந்தோம். அவை அத்தனையிலும் முக அடை யாளத்தை ஒப்பிடும் தொழில் நுட்பம் இருந்தது. "மேலும் காவல்துறையின் தரவுத் தொகுப்போடு அந்த கேமராக்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அந்த கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஏவோ ஸாங்‌ஷு அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்," என்றார் அவர்.