பிரிட்டன் கருத்துக்கணிப்பு: குறுகிய பெரும்பான்மையில் வெற்றி

பிரிட்டனில் நாளை (டிசம்பர் 12) நடைபெறும் பொதுத் தேர்தல் முடிவுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தக் கட்சி நாட்டை ஆள்வது என்பதை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை. அதைத் தாண்டி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்குமா அல்லது வெளியேறிவிடுமா என்பதைத் தீர்மானிப்பதாகவும் இருக்கும்.

பிரிட்டன் ஒன்றியத்தில் இருப்பதா, வேண்டாமா என்ற முடிவு பல தலைமுறைகளை பாதிக்கும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அது குறித்து சரியான தகவல்களை இதுவரை தரவில்லை என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

மாறாக, தேர்தல் பிரசாரம் இரு முக்கிய கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட முறையிலான பிரசாரமாக விளங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நான்கு வார பிரசார காலத்தின் பெரும் பகுதியில் கருத்துகணிப்புகள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியே தொழிற் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 புள்ளிகள் அதிகமாக பொதுமக்கள் ஆதரவைப் பெற்று முன்னணி வகித்து வந்ததாக கூறிவந்துள்ளன.

இது உண்மையெனில், தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 60 இடங்கள் கூடுதலாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறிவந்துள்ளன.

ஆனால், பிரிட்டனில் யூகாவ் என்ற அதிக நம்பிக்கையுள்ள கருத்துக் கணிப்பு அமைப்பு அண்மையில் வெளியிட்ட முடிவுகளின்படி, இந்த முன்னணி நிலைமை மாறிவருவதாகவும் தற்போதைய நிலையில் கன்சர்வேடிவ் கட்சிக்கு நாடாளுமன்றத்தின் மொத்தம் 650 இடங்களில் 339 மட்டுமே கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

இதன்படி பார்த்தால் அக்கட்சிக்கு 14 இடங்கள் கொண்ட பெரும்பான்மையே கிடைக்கும் என்று எண்ணத் தோன்றுவதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

எனினும், கட்சி விசுவாச நிலை மாறி வருவதாகவும் கருத்துக் கணிப்புகளை ஓரளவு மட்டுமே நம்பலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரச்சினை பிரிட்டிஷ் மக்களிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிளவு படுத்தியுள்ளதாகவும் பிபிசி செய்தி விளக்குகிறது.

பிரிட்டிஷ் மக்களிடையே நான்கு வகையான தேர்தல் போக்குகள் தோன்றி வருவதாகவும் இதில் எந்தப் போக்கு தலைதூக்கினாலும் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைமுறை தலைமுறையாக இங்கிலாந்தின் தெற்கு பகுதியிலேயே ஆதரவு அதிகமாக இருந்து வந்துள்ளது என்ற நிலையில் அங்குள்ள மக்கள் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை எதிர்ப்பதாகக் கூறப்படு;கிறது.

இவர்கள் தங்கள் ஆதரவை லிபரல் கட்சிக்கு வழங்கினால் கன்சர்வேடிவ் கட்சிக்கு திண்டாட்டமாகிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம், தொழிற்கட்சி ஆதரவுப் பகுதியான வடகிழக்கு இங்கிலாந்தில் தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி தெளிவற்ற பிரெக்சிட் கொள்கையினால் அதன் ஆதரவாளர்கள் அவருடைய கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய நிலை உள்ளதாகவும் தெரிவதாக பிபிசி செய்தி விளக்குகிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!