வாணவேடிக்கையல்ல; தீச்சம்பவம்

வாணவேடிக்கையல்ல; தீச்சம்பவம்

1 mins read
f22b41df-9e27-4a91-a5c0-a0b9c93616d6
இந்தக் காணொளி மலேசியாவின் தாமன் சௌஜானா தைப்பிங்கில் எடுத்தது என்று 'ஃபேப்ரிகேஷன்ஸ் ஆஃப் பிஏபி'யின் ஃபேஸ்புக் பதிவு ஒன்று குறிப்பிட்டது. -

மேல் மாடியுடன் கூடிய தரை வீடு ஒன்றின் முகப்பில் வாணவேடிக்கையை ஒத்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

சுமார் 14 வினாடிகளுக்கு நீடிக்கும் அந்தக் காணொளியில் பலத்த வெடிச் சத்தங்களையும் தீப்பிளம்புகளையும் காண முடிந்தது. வீட்டுக்கு முன்பாக புகைமண்டலம் காணப்பட்டது.

(காணொளியை முழுமையாகக் காண Full Screen Modeக்கு செல்லவும்.)

கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மின்னிணைப்பு கோளாறு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், உறுதியான தகவல்கள் இல்லை.

வீட்டின் தரைத் தளத்தில் உள்ள முகப்புப் பகுதியில் சிவப்பு வண்ண கார் ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளன.

வீட்டின் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம், இரண்டு தீயணைப்பாளர்களையும் காண முடிகிறது. ஆனால் தீயணைப்புப் பணியில் யாரும் ஈடுபட்டிருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தீயணைப்பு வாகனத்திலிருந்து ஒரு குழாய் வீட்டின் உள்ளே கொண்டு செல்லப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

இந்தக் காணொளி மலேசியாவின் தாமான் சௌஜானா தைப்பிங்கில் எடுத்தது என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்று குறிப்பிட்டது. இந்தச் சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பதைப் பற்றிய தகவல் இல்லை.

மேலும் சிலர் வீட்டுக்கு வெளியிலிருந்து சம்பவத்தை வேடிக்கை பார்ப்பதும் காணொளியில் தெரிகிறது.

சம்பவம் பற்றி கருத்துரைத்த இணையவாசி ஒருவர் 'மிகவும் திகிலூட்டக்கூடியதாக' இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்