தொடர் கொலைகள் புரிந்துவந்த சோம்கிட் பம்புவாங் எனும் ஆடவர் சிறையிலிருந்தபோது நன்னடத்தைக்காக தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுவிக்கப்பட்டார்.
ஆனால், விடுதலையான பிறகு மீண்டும் அவர் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி தாய்லாந்து போலிசார் அவரைத் தேடி வருகின்றனர்.
2005ஆம் ஆண்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பெண்களை சோம்கிட் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 55 வயதாகும் சோம்கிட் ‘நல்ல கைதி’ என்ற பெயருடன் கடந்த மே மாதம் விடுவிக்கப்பட்டார்.
ஏழு மாதங்களுக்குப் பிறகு, தற்போது வடகிழக்கு தாய்லாந்தில் 51 வயதான விடுதி பணிப்பெண்ணைக் கொலை செய்ததன் தொடர்பில் போலிசார் சோம்கிட்டைத் தேடி வருகின்றனர்.
இந்தக் கொலை கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) அன்று நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
சோம்கிட் பற்றிய விபரம் தெரிவிப்போருக்கு 50,000 பாட் (S$2,240) பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity