இந்தோனீசியா, சீனாவில் நிலநடுக்கம்

இந்தோனீசியா, சீனாவில் நிலநடுக்கம்

1 mins read
97b6ded8-9064-4392-ad8b-2d4b0be2aae9
நேற்று இரவு 9.27 மணிக்கு காஷ்கர் நகருக்கு 100 கி.மீ. கிழக்கு - வடகிழக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. படம்: யுஎஸ்ஜிஎஸ் -

இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியான பாப்புவா நியூ கினியில் நேற்று (ஜனவரி 19) 6.0 ரிக்டர் அளவிலான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (யுஎஸ்ஜிஎஸ்) குறிப்பிட்டது.

வட்டாரத் தலைநகரான ஜெயபுராவிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

அதேபோல, வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்தில் நேற்று (ஜனவரி 19) பின்னேரத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (யுஎஸ்ஜிஎஸ்) குறிப்பிட்டது.

நேற்று இரவு 9.27 மணிக்கு காஷ்கர் நகருக்கு 100 கி.மீ. கிழக்கு - வடகிழக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் பல வீடுகள் மண், செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதால் பல கட்டடங்கள் சேதமடைந்திருக்கும் என்று கூறிய அந்த நிலயத்தின் ஆரம்பகட்ட கணிப்புப்படி, உயிர்ச்சேதம் இல்லை என்றது.

மக்கள் அதிகம் வசிக்காத மலை, பாலைவனப் பகுதி அது என்று கூறப்பட்டது.

#தமிழ்முரசு #நிலநடுக்கம் #இந்தோனீசியா #சீனா

குறிப்புச் சொற்கள்