கொரோனா கிருமித்தொற்றின் மையம் என்று அறியப்படும் வூஹான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கிருமித்தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டு, உடல் நலம் தேறிய 20 பேர் மருத்துவமனியிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்தக் காணொளியை 'பீப்பிள்ஸ் டெய்லி' வெளியிட்டுள்ளது.
நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வெளியேறும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கைகளை உயர்த்திக் காட்டியபடி உற்சாகத்துடன் வெளியேறுவதைக் காணொளியில் காண முடிகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையும் 12000-யை நெருங்கி வருகிறது.
#தமிழ்முரசு #வூஹான்


