சீனாவில் 2019 நோவல் கொரோனா கிருமித் தொற்று நாளுக்கு நாள் அதிவேகத்தில் பரவி 17,000க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ள நிலையில் அந்த கிருமி உருவானதாக நம்பப்படும் வூஹான் நகரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க எட்டு நாட்களில் மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஹுவோஷென்ஷான் என்பது மருத்துவமனையின் பெயர்.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் இந்த மருத்துவமனை அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கிய இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதில் 1,000 படுக்கை வசதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்தப் புதிய மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 3) முதல் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணியில் சுமார் 1,400 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய மருத்துவமனையின் கட்டுமானப் பணி ஜனவரி 25ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 7,500 ஊழியர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.
நோவல் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மேலும் ஒரு மருத்துவமனையை சீன அரசாங்கம் கட்டி வருகிறது.
இதில் 1,600 படுக்கைகள் இடம்பெற்றிருக்கும். இந்த மருத்துவமனை புதன்கிழமையிலிருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
#மருத்துவமனை #வூஹான் #தமிழ்முரசு #கொரோனா #Huoshenshan


