தொழில்நுட்ப உத்திகளை ஹுவாவெய் நிறுவனம் திருடியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட நீண்ட காலமாக சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் முயற்சி செய்து வருவதாக அமெரிக்கா மீண்டும்  குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களிடம் கூட்டணி நிபந்தனைகளை ஹுவாவெய் மீறிவிட்டதாகவும் இயந்திரவியல் தொழில்நுட்பம், 'சோர்ஸ் கோட்' போன்ற வர்த்தக ரகசியங்களை அது திருடியதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஹுவாவெய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

அதில்,  அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஹுவாவெய் மீறுவதாகவும் 'டி சிரிஸ்' எனப்படும் ஒரு வகை அலைப்பேசியிலிருந்து தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் திருடியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஹுவாவெய் நிறுவனம் மறுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஹுவாவெய், தான் கண்டு வரும் வளர்ச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அந்நாடு தங்களைக் குறிவைப்பதாக பதிலடி தந்துள்ளது.

Loading...
Load next