சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு கிருமித்தொற்று; மூவர் வீடு திரும்பினர்

சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு கிருமித்தொற்று; மூவர் வீடு திரும்பினர்

1 mins read
8b3c87e3-db38-423b-9bf9-c7b74766ba81
இன்று (பிப்ரவரி 20) ஒருவருக்குக் கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் வீடு திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து, கிருமித் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37 ஆகி உள்ளது.

இதற்கிடையே இன்று (பிப்ரவரி 20) ஒருவருக்குக் கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர் சீனாவுக்குச் சென்று வந்தாரா அல்லது அங்கு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தாரா என்ற விவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும் புதிதாகவும் அண்மையிலும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த விவரங்களை அமைச்சு நேற்று வெளியிட்டது.

தற்போதைய நிலவரப்படி 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது. நான்கு பேரின் நிலை மோசமாக உள்ளது.

#தமிழ்முரசு #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்