கொவிட்-19: ஆறு மாதக் குழந்தை உட்பட இருவர் வீடு திரும்பினர்; புதிதாக மூவருக்கு கிருமித்தொற்று

கொவிட்-19: ஆறு மாதக் குழந்தை உட்பட இருவர் வீடு திரும்பினர்; புதிதாக மூவருக்கு கிருமித்தொற்று

1 mins read
a5395ab0-74ba-4032-ac99-9d90f3ddfe89
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 49  ஆகியுள்ளது. அவர்களில் ஆறு மாதக் குழந்தையும் ஒருவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக இன்று (பிப்ரவரி 22) சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இங்கு மேலும் மூவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆகியுள்ளது.

இதனையடுத்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 49 ஆகியுள்ளது. அவர்களில் ஆறு மாதக் குழந்தையும் ஒருவர்.

மருத்துவமனையில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது; அல்லது முன்னேற்றம் தென்படுகிறது.

ஆனால், ஐவரின் உடல்நிலை மோசமாக இருப்பதையடுத்து, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் 'கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்' தேவாலயத்துடன் தொடர்புடையவர். மற்றொருவர் இம்மாதம் 9ஆம் தேதி வூஹானிலிருந்து சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்வதாக அமைச்சு குறிப்பிட்டது.

#சிங்கப்பூர் #கொரோனா #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்