கொரோனா கிருமித் தொற்று உலக அளவில் பரவிவரும் நிலையில், சீனாவிலிருந்து தருவிக்கப்படும் முகக்கவசங்கள், கிருமி நாசினி பொருட்கள், மருத்துவ பரிசோதனை கையுறைகள் ஆகியவற்றுக்கு அமெரிக்க வர்த்தக இலாகா வரி விலக்கு அளித்துள்ளது.
சீனாவிலிருந்து வரும் மற்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மாதக் கணக்காக கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நிலையில் மருத்துவ சா தனங்களுக்கான வரி விலக்கு ஒரு மாதத்துக்கு உள்ளாகவே அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இதன் தொடர்பில் அறுவை சிகிச்சை செய்யும்போது பயன்படுத்தப்படும் உடுப்புகள், முகக்கவசங்கள், மருத்துவமனைகள் பயன்படுத்தும் கோப்பைகள் என 30 பொருட்கள்மீது விதிக்கப்பட்டுள்ள வரிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மெட்லைன் இன்டர்நேஷனல் நிறுவனம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தில் இருந்தபோது கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தப் பொருட்களின்மீது வரி விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
#சீனா #அமெரிக்கா #வரிவிலக்கு #கொரோனா #மருத்துவப் பொருட்கள்

