சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு கிருமித்தொற்று; 8 பேர் குணமடைந்தனர்

சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு கிருமித்தொற்று; 8 பேர் குணமடைந்தனர்

1 mins read
003430b2-8603-4d7f-99f9-b77f2354c333
புதிதாக கிருமி தொற்றியவர்களில் நால்வர் பிப்ரவரி  15ஆம் தேதி சஃப்ரா ஜூரோங் கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 8 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 7) உறுதி செய்யப்பட்டது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கிருமி தொற்றியவர்களில் நால்வர் சஃப்ரா ஜூரோங் கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள்.

புதிதாக கிருமி தொற்றியவர்களில் ஒருவர், பாய லேபரில் உள்ள தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் தேவாலயத்துடன் தொடர்பிலான கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவர்.

புதிதாக கிருமி தொற்றியவர்களில் இருவர், இறக்குமதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள். இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு, ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட யாருடனும் தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் முயற்சி தொடர்கிறது.

அதே சமயம், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து எண்மர் வீடு திரும்பியதாகவும் அமைச்சு கூறியது. இவர்களையும் சேர்த்து, இதுவரை 90 பேர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது.

எண்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்