கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்தவர்களைத் தனிமைப்படுத்தும் வளாகமாக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
அதுபோக, 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. காயமுற்ற நிலையில் இடிபாடுகளிலிருந்து 41 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் இன்று (மார்ச் 10) தெரிவித்தனர்.
சீனாவின் கிழக்கு கரையோர நகரமான குவான்ஸோவில் அமைந்துள்ள அந்த ஆறு மாடி ஹோட்டல், கடந்த சனிக்கிழமை இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட தாயும் அவரது 10 வயது மகனும் 52 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று இரவு மீட்கப்பட்டனர்.
குவாங்ஸோவில் இதுவரை 47 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#சீனா #கொரோனா #ஹோட்டல்

