சுடச் சுடச் செய்திகள்

பிலிப்பீன்ஸ், தென்கொரியா, கம்போடியா கிருமித்தொற்று விவரம்

மணிலா: பிலிப்பீன்சில் இன்று (மார்ச் 17) புதிதாய் 45 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன என்றும் அவற்றையும் சேர்த்து அந்நாட்டில் மொத்தம் 187 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. அங்கு இதுவரை இந்தக் கொள்ளைநோய்க்கு 12 பேர் பலியாகி விட்டனர்.

சோல்: தென்கொரியாவில் இன்று 84 புதிதாக கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவற்றையும் சேர்த்து அங்கு இதுவரை 8,320 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தொடர்ந்து மூன்றாக நாளாக அங்கு நாள்தோறும் 100க்கும் குறைவான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. பிப்ரவரி 29ஆம் தேதி மட்டும் அங்கு 909 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன.

புனோம்பென்: கம்போடியாவில் இன்று 12 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அந்நாட்டில் மொத்தம் 24 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களில் 11 பேர் மலேசியாவில் நடைபெற்ற சமய நிகழ்வுக்குச் சென்றிருந்தனர்.

#கொரோனா #கொவிட்-19

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon