அறிகுறிகளின்றி கிருமித்தொற்று கண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சத்தில் சீனா

கொரோனா கிருமிப் பரவல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய சீனாவில் தற்போது கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் அறிகுறிகுகள் இல்லாதோருக்கு கிருமித்தொற்று இருப்பது அதிகரித்து வருகிறது. இது அச்சமளிக்கும் போக்காக உள்ளது.

நேற்று (மார்ச் 31) அங்கு 36 பேருக்கு மட்டுமே புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. அதற்கு முந்தைய நாள் பதிவான 48 சம்பவங்களைவிட இது குறைவு என்பது ஆறுதல்.

அங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,554 என்றது ஆணையம்.

ஆனால், கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமின்றி புதிதாக 130 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறிகளின்றி கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையை இன்று முதல் சீனா வெளியிடத் தொடங்கியுள்ளது.

வேறு சில நாடுகளிலும் இத்தகைய கிருமித்தொற்று சம்பவங்கள் இருப்பதைக் குறிப்பிட்ட உலக சுகாதார நிறுவனம் அந்த நாடுகள் அவர்களது எண்ணிக்கையை கிருமித்தொற்று கண்ட மொத்த எண்ணிக்கையுடன் சேர்த்துவிடுவதாகக் குறிப்பிட்டது.

அறிகுறிகள் ஏதுமின்றி கிருமித்தொற்று கண்டிருப்பவர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே மற்றவர்களுக்கு கிருமியைப் பரப்பக்கூடும் என்று சீனாவில் சமூக ஊடகங்களில் மக்கள் அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஹுபெய் மாகாணத்தில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

தற்போது அறிகுறிகள் தென்படாவிட்டாலும் அவர்களுக்கு ஒருசில நாட்களில் அறிகுறிகள் தென்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்க்கோவ் கடந்த வாரம் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அறிகுறிகள் இன்றி கிருமியைக் கொண்டிருப்பவர்களுக்கு கூடுதல் பரிசோதனைகளைச் செய்யவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியவும் சீனா முடிவெடுத்துள்ளது.

நேற்று முன்தினம் அத்தகையோர் 1,541 பேர் கண்காணிப்பில் இருந்ததாகவும் நேற்று அந்த எண்ணிக்கை 1,367 ஆகக் குறைந்திருப்பதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.

ஆனால், கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில், நேற்று அங்கு எழுவர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடையே கிருமித்தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 806.

வெளிநாடுகளிலிருந்து வருவோரால் கிருமித்தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் வெளிநாட்டினருக்கு நுழைவு அனுமதி மறுத்துள்ள சீனா, வெளிநாடுகளிலிருந்து வரும் சீன குடிமக்களுக்கு பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

#சீனா #கொவிட்-19

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!