சுடச் சுடச் செய்திகள்

உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அச்சத்தில் ஆசிய நாடுகளின் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல்

பேரங்காடிகளில் பதற்றத்துடன் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிப்பது அதிகரித்து வருவதைப் பார்த்தால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வருமோ என்ற அச்சத்தை அதிகரிப்பதாக உள்ள வேளையில், தங்கள் குடிமக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய செலவில் உணவு கிடைப்பதை உறுதி செய்வது, நாடுகளின் அரசியல் நிலைத்தன்மைக்கு முக்கியம்.

ஆனால், அப்படி பதற்றமடையத் தேவையில்லை, தேவையான அளவுக்கு உணவுப் பொருட்கள் கையிருப்பு உள்ளன.

ரஷ்யா, கஸக்ஸ்தான், உக்ரேன் ஆகிய நாடுகள் கோதுமை பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் ஆசிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு போதிய அளவுக்கு அரிசி உணவை வழங்க முடியுமா என்று கவலையடைந்துள்ளன. சீனாவும் இந்தியாவும் உலக அளவில் ஆக அதிகமாக அரியை உற்பத்தி செய்து பயன்படுத்தக்கூடிய நாடுகள்.

உலகின் மூன்றாவது பெரிய உணவுப்பொருள் ஏற்றுமதி நாடான வியட்னாம் தற்காலிகமாக ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. உள்நாட்டில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கையை அது எடுத்துள்ளது.

உள்நாட்டு பற்றாக்குறையைத் தவிர்க்க மியன்மாரும் உணவுப் பொருள் ஏற்றுமதியைக் குறைத்துள்ளது.

நாடுகள் அதிகப்படியான எச்சரிக்கை உணர்வுடன் இவ்வாறு செயல்படுகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பைச் சேர்ந்த திரு டேவிட் டாவே கூறினார். 

அதேபோல, உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் சும்மாயிருக்கவில்லை. பிலிப்பீன்சில் மக்களின் ஊணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக US$600 மில்லியன் (S$855 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. 300,000 டன் அரிசியை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அது திட்டமிடுகிறது.

சுமார் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் இவ்வாண்டு அதிக அளவிலான அரிசியை விவசாயிகளிடமிருந்து வாங்கி சேமிக்கத் திட்டம் உள்ளது.

ஆனால், அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்பதே உண்மை.

அரிசியின் ஆகப் பெரிய ஏற்றுமதியாளரான இந்தியாவின் சேமிப்புக்கிடங்குகளில் அரிசியும் கோதுமையும் குவிந்துள்ளன.

2019-20ஆம் ஆண்டில் சாதனை அளவாக 500 மில்லியன் டன் அரிசி உலக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது; 180 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அரிசி உலக அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் விவசாயத் துறை தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, தாய்லாந்திலும் போதுமான அளவுக்கு அரிசி இருப்பு இருக்கிறது.

இதற்கிடையே, இந்தியாவில் நடப்பில் உள்ள ஊரடங்கு காரணமாக அறுவடைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைக் காலத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து பெருவாரியான பணியாளர்கள் வேலையில் இறக்கப்படுவர். ஆனால், அது இப்போது இயலாமல் போயுள்ளது.

உலகின் நான்காவது பெரிய மக்கள்தொகையை கொண்ட இந்தோனீசியாவும் போதுமான உணவுப்பொருட்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

தற்காலிகமாக அரிசியின் விலை சற்று அதிகரிக்கும் என்று கூறிய திரு டாவே, 2008ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற விலை உயர்வு இப்போது நிகழாது என்றார்.

அனைத்துலக அளவில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் 2008ஆம் ஆண்டில் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டன; உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன.

#ஆசிய நாடுகள் #உணாவுப்பொருள் #ஏற்றுமதி
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon