சுடச் சுடச் செய்திகள்

தாய்லாந்து: கிருமித்தொற்றால் இந்தியர் உட்பட மூவர் பலி; 111 பேர் பாதிப்பு

தாய்லாந்தில் கெரோனா கிருமித்தொற்றுக்கு இன்று (ஏப்ரல் 8) மேலும் 3 பேர் பலியாகிவிட்டனர்.

புதிதாக 111 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

மாண்டவர்களில் 48 வயது ரஷ்யர் ஒருவர்; 69 வயது இந்தியர், 69 வயது அமெரிக்கர் ஆகியோர் மற்றவர்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

தாய்லாந்தில் கடந்த ஜனவரியில் கொரோனா முதன்முதலாக தலைகாட்டியது.

அது முதல் மொத்தம் 2,369 பேரை அந்தக் கிருமி தொற்றி இருக்கிறது.

இதுவரை 30 பேர் மாண்டுவிட்டனர்; 888 பேர் குணமடைந்து உள்ளனர்.

தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பட்டாயா உள்ளிட்ட பல பொழுதுபோக்கு பகுதிகளும்  மூடப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான புக்கெட், கொரோனா கிருமித்தொற்று மையமாகப் பரிணமித்து உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon