சீனாவில் கொரோனா கிருமி பரவல் தொடங்கிய நகரான வூஹானில் இருக்கும் சீன நுண்கிருமி ஆய்வகத்தில் மூன்று வகை வௌவால் கொரோனா உயிர்க் கிருமிகள் இருக்கின்றன என்றும் ஆனால் இப்போது உலகையே முடக்கி இருக்கும் கிருமிக்கும் அவற்றுக்கும் தொடர்பே இல்லை என்றும் அந்த ஆய்வகத்தின் இயக்குநர் தெரிவித்து இருக்கிறார்.
உலகில் 340,000 பேரைக் கொன்றுவிட்ட கொவிட்-19 கிருமி, சீனாவின் வூஹான் நகரில் வௌவால்களின் உடலில் இருந்து தோன்றி வேறு ஒரு பாலூட்டி இன பிராணிக்குத் தொற்றி பிறகு மனிதர்களைத் தொற்றி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இருந்தாலும் கொவிட்-19 கிருமி, வூஹான் நுண்கிருமி ஆய்வகத்தில் இருந்து கசிந்து வெளியாகி இருக்கிறது என்று அமெரிக்க அதிபரும் மற்றவர்களும் கூறிவருவது சுத்த கட்டுக்கதை என்று வூஹான் நுண்கிருமி ஆய்வகத்தின் இயக்குநர் கூறியதாக மாநில ஒளிபரப்பு நிறுவனமான சிஜிடிஎன் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

