முஸ்தஃபா சென்டர், ஸ்ரீ முருகன் டிரேடிங் உட்பட கிருமித்தொற்று கண்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியல்

முஸ்தஃபா சென்டர், ஸ்ரீ முருகன் டிரேடிங் உட்பட கிருமித்தொற்று கண்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியல்

1 mins read
b3f3101b-45b4-416f-a510-30bbeb862e6c
முஸ்தஃபா நிலையம், ஸ்ரீ முருகன் டிரேடிங் உட்பட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்ற தேதி, நேரம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. -

சிங்கப்பூரில் ஜூன் முதல் தேதியிலிருந்து முதல்கட்டமாக தளர்வுகள் நடப்பில் இருக்கும் நிலையில், கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள் (உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக) சென்று வந்த இடங்களைப் பற்றிய விவரத்தையும் சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டது.

முஸ்தஃபா நிலையம், ஸ்ரீ முருகன் டிரேடிங் உட்பட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்ற தேதி, நேரம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. குறிப்பிட்ட அந்த நேரங்களில் அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் தங்களது உடல் நலத்தை அணுக்கமாகக் கவனித்து, தேவை ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்த நிறுவனங்களுடன் தேசிய சுற்றுப்புற வாரியம் தொடர்புகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும்.

கீழ்க்கண்ட அட்டவணையில் முழு விவரங்கள்:

(இந்த அட்டவணையில் குடியிருப்புப் பகுதிகள், வேலையிடங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பொதுப் போக்குவரத்து ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

குறிப்புச் சொற்கள்