சிங்கப்பூரில் ஜூன் முதல் தேதியிலிருந்து இரண்டாம் கட்டத் தளர்வுகள் நடப்பில் இருக்கும் நிலையில், கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள் (உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக) கிருமிப் பரவல் நிகழக்கூடிய சாத்தியமுள்ள நிலையில் சென்று வந்த இடங்களைப் பற்றிய விவரத்தையும் சுகாதார அமைச்சு நேற்று (ஜூன் 22) வெளியிட்டது.
இரண்டு ஷெங் சியோங் பேரங்காடிகள், ஒரு என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஆகியவற்றுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றிருந்ததாக சுகாதார அமைச்சு நேற்றிரவு அறிவித்தது.
பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் எண் 7 ஜூரோன் வெஸ்ட் அவென்யூ 5ல் இருக்கும் ஷென் சியோங் பேரங்காடியில் ஜூன் 9ஆம் தேதி காலை 7.50 முதல் 8.20 மணி வரை இருந்தார்.
எண் 19, சிராங்கூன் நார்த் அவென்யூ 5ல் இருக்கும் ஷென் சியோங் பேரங்காடியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கொவிட்-19 நோயாளி ஒருவர் மாலை 5.15 முதல் 6.05 மணிவரை இருந்தார்.
கிருமித்தொற்று கண்ட மற்றொரு நபர் 447A ஜாலான் காயுவில் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடையில் இம்மாதம் 15ஆம் தேதி மாலை 6.25 முதல் இரவு 8.55 வரை இருந்தார்.
கீழ்க்கண்ட அட்டவணையில் முழு விவரங்கள்:
(இந்த அட்டவணையில் குடியிருப்புப் பகுதிகள், வேலையிடங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பொதுப் போக்குவரத்து ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை)
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

