சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டோர் சென்ற மேலும் 12 இடங்கள்

சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டோர் சென்ற மேலும் 12 இடங்கள்

1 mins read
1db08d61-46c0-43a6-80b7-26e1969ebbd3
313 @ சாமர்செட், விவோசிட்டி, பூகிஸ் ஜங்ஷன் போன்ற புதிய இடங்கள் உட்பட 12 இடங்களுக்கு அவர்கள் சென்ற தேதி, நேரம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள் (உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக) சென்று வந்த இடங்களைப் பற்றிய விவரத்தை சுகாதார அமைச்சு நேற்று (ஜூன் 25) வெளியிட்டது.

313 @ சாமர்செட், விவோசிட்டி, பூகிஸ் ஜங்ஷன் போன்ற புதிய இடங்கள் உட்பட 12 இடங்களுக்கு அவர்கள் சென்ற தேதி, நேரம் போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டன.

குறிப்பிட்ட அந்த நேரங்களில் அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் தங்களது உடல் நலத்தை அணுக்கமாகக் கவனித்து, தேவை ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்த நிறுவனங்களுடன் தேசிய சுற்றுப்புற வாரியம் தொடர்புகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும்.

கீழ்க்கண்ட அட்டவணையில் முழு விவரங்கள்:

(இந்த அட்டவணையில் குடியிருப்புப் பகுதிகள், வேலையிடங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பொதுப் போக்குவரத்து ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்