சிங்கப்பூர் பொதுத் தேர்தலை எதிர்த்து வழக்கு; திங்கட்கிழமை விசாரணை

சிங்கப்பூர் பொதுத் தேர்தலை எதிர்த்து வழக்கு; திங்கட்கிழமை விசாரணை

1 mins read
dee7084f-e11a-4fd7-aadb-85e82d2e1789
இந்த வழக்கை டேனியல் டி சூசா(இடது) சார்பில் மனித உரிமை வழக்கறிஞர் எம் ரவி தொடுத்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பொதுத் தேர்தலை இப்போது நடத்துவது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்பதால் இப்போது தேர்தலை நடத்தக்கூடாது என்று தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடும்படி கேட்டு தொடுக்கப்பட்டு உள்ள வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்கிறது.

அந்த வழக்கை டேனியல் டி சூசா சார்பில் மனித உரிமை வழக்கறிஞர் எம் ரவி தொடுத்துள்ளார்.

பிரதமர் பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்பை தேசிய தொலைக்காட்சியில் விடுத்த அதே நாளன்று சில மணி நேரத்துக்குள் நீதிமன்ற நடவடிக்கையை நாடியதாக அந்த வழக்கறிஞர் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பிலான நீதிமன்ற விசாரணையை வேட்பு மனு சமர்ப்பிப்பதற்கு முன்பாக வைக்க வேண்டும் என்று திரு ரவி கோரிக்கை விடுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பொதுத் தேர்தல்வழக்கு