இந்தோனீசியாவின் சுலாவேசி தீவில் வெள்ளம்; 16 பேர் மரணம்

1 mins read
3f93f6b6-f124-42ca-894d-f85382a27f65
வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீதியில் நடந்துசெல்லும் குடியிருப்பாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தோனீசியாவின் சுலாவேசி தீவில் நேற்று திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக குறைந்தது 16 பேர் மரணமடைந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் வசிக்க வீடின்றி தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு சுலாவேசி மாநிலம், வடக்கு லூவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் காணாமல்போன 23 பேரைத் தேடுதல், மீட்பு அதிகாரிகள் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்