இந்தோனீசிய தலைமைச் சட்ட அதிகாரி அலுவகத்தில் பெருந்தீ

இந்தோனீசிய தலைமைச் சட்ட அதிகாரி அலுவகத்தில் பெருந்தீ

1 mins read
3c2cee9f-ebe9-4bec-abd3-2bd6c66a5bed
65 தீயணைப்பு இயந்திரங்களின் உதவியுடன் 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்தில் பெருந்தீ ஏற்பட்டதன் தொடர்பில் போலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நகரின் போலிஸ் பேச்சாளார் யுஸ்ரி யுனுஸ் கூறினார்.

நேற்று இரவு 7 மணி வாக்கில் தெற்கு ஜகார்த்தாவில் அமைந்துள்ள அந்த ஆறு மாடிக் கட்டடத்தின் பெரும்பகுதி தீக்கிரையாவதை புகைப்படங்கள் சித்திரித்தன. 65 தீயணைப்பு இயந்திரங்களின் உதவியுடன் 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

அந்த தீச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்புள்ளிகளின் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் தீச்சம்பவம் ஏற்பட்டிருப்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரவிய நிலையில், வழக்குகள் தொடர்பான கோப்புகள் பாதுகாப்பாக இருப்பதாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலக பேச்சாளர் ஹரி செடியோனோ கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்