இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று அதிகாலை வேளையில் நிகழ்ந்த கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். எழுவர் காயமடைந்தனர்; அவர்களில் ஆண், பெண் என இருவரின் உடல் நிலை கவலைக்கிடம்.
இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பிரபலமான இடங்களில் ஒன்றான ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலின் தொடர்பில் ஆடவர் ஒருவரைத் தேடுவதாக போலிசார் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட எந்தப் பிரிவினர் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் காலை 7.30 மணி) ஆர்கேடியன் சென்டருக்கு அருகில் வன்முறை நிகழ்ந்தது. சுமார் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பர்மிங்ஹாம் நகரில் அண்மைக்காலமாக கும்பல் கலாசாரமும் வன்முறையும் தலைதூக்குவதாகக் கூறப்படுகிறது.

