வட சுமத்திரா: வெள்ளத்தால் வீடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

வட சுமத்திரா: வெள்ளத்தால் வீடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

1 mins read
b801e196-e979-45b1-8d1b-c40e159b3543
-

இந்தோனீசியாவின் வடக்கு சுமத்திரா மாநிலத்தில் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பெய்த பருவமழையால் அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான வசதிகளும் தனியார் சொத்துகளும் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் குறைந்தது 80 வீடுகள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் நார்த் லாபுத்தான் பாத்து வட்டாரத்தின் மெர்பாவு மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கானோர் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. வெளியேறியவர்கள் தங்களது உறவினர்களுடன் அல்லது வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்