சிங்கப்பூரில் இருந்து அத்தியாவசிய வேலைகளுக்காக வர அனுமதிக்கும் வகையில் பிரத்தியேக பயண ஏற்பாடு குறித்து இந்தோனீசியா, சிங்கப்பூருடன் பேச்சு நடத்தி வருகிறது.
அதற்கேதுவாக, வெளிநாட்டினருக்கான தடை தொடர்பான ஒரு விதியை இந்தோனீசியா திருத்தி வருவதாக 'கொம்பாஸ்' நாளிதழ் செய்தி கூறுகிறது.
அந்தப் பயண ஏற்பாட்டின்கீழ் இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்து மின்னணு விசா சேவை நடப்பிற்கு வரும் என்றும் சிங்கப்பூரில் இருந்து வருவோருக்காக சுகார்னோ ஹட்டா அனைத்துலக விமான நிலையத்திலும் பாத்தாம் தீவிலும் சிறப்புச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் இந்தோனீசிய சட்ட, மனித உரிமைகள் அமைச்சர் யசோனா லாவ்லி தெரிவித்து இருக்கிறார்.

