பாகிஸ்தான் பிரதமரை பதவி விலகக் கோரி கராச்சியில் பேரணி

பாகிஸ்தான் பிரதமரை பதவி விலகக் கோரி கராச்சியில் பேரணி

1 mins read
3a31628c-c947-4730-b11f-7de179d0094d
11 எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் பெருமளவு இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர். படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கராச்சி நகரில் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பேரணியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

9 முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் டெமாக்ரடிக் மூவ்மென்ட் (PDM) எனும் தளத்தை கடந்த மாதம் உருவாக்கி, நாடு முழுவதும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டின.

பேரணியில் கூடியவர்களிடையே உரையாடிய மரியம் நவாஸ், மக்களின் வேலைகளும் உணவும் பறிக்கப்பட்டு விட்டதாகக் குற்றம் சாட்டினார்.

கொவிட்-19 சூழலுக்கு முன்னதாகவே நாட்டின் பொருளியல் சரிவை நோக்கியிருந்த நிலையில், தற்போது பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பதற்கு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் காரணம் காட்டி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு குஜ்ரன்வாலா நகரில் மாபெரும் போராட்டமும் நடத்தப்பட்டது. திரு இம்ரான் கான் பதவியேற்ற ஈராண்டுகளில் நிகழ்ந்த ஆகப் பெரிய போராட்டம் அது என்று கூறப்படுகிறது. அடுத்த தேர்தல் 2023ஆம் ஆண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்