சிங்கப்பூர் உட்பட 9 நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது ஜப்பான்

சிங்கப்பூர் உட்பட 9 நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது ஜப்பான்

1 mins read
ca2e1fb5-6405-4f8d-a483-e13479f05a55
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூர், தாய்லாந்து, நியூசிலாந்து, புருணை, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு ஜப்பானியர்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடைகளை தோக்கியோ அடுத்த நிலைக்குத் தளர்த்தி இருக்கிறது.

சீனா, தைவான், ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு இருப்பதாக வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோடிகி தெரிவித்தார்.

ஆயினும், அத்தியாவசியமல்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவைப்போல ஜப்பானில் கொரோனா தொற்றுப் பரவல் மிதமிஞ்சியதாக இல்லை.

சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையே பச்சைப் பயணத் தடம் அனுமதிக்கப்பட்டு, வர்த்தகப் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஜப்பான்பயணம்