மலேசியாவின் லிம்பாங்கில் பள்ளி ஒன்றுக்கு அருகில் பிடிபட்ட 800 கிலோ எடையுள்ள முதலையின் தலையில் மோசமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததால் அது கருணைக்கொலை செய்யப்பட்டது.
"லிம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் முதலையை மீட்பதற்கு முன்பாகவே பொதுமக்களில் ஒருவர் அதன் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்," என சரவாக் ஃபாரெஸ்ட்ரி அமைப்பின் தலைமை நிர்வாகி ஸோல்கிஃப்லி முகமது ஏடன் தி ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
அந்த முதலையைச் சுட்டவர் யார் என்பது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளாது.
சுமார் 5 மீட்டர் நீளமான் அந்த முதலை எஸ்கே செயின்ட் எட்மண்டுக்கு அருகில் உள்ள சாக்கடையில் முதலை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் காயத்துக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுவது இயலாத நிலையில் அது கருணைக்கொலை செய்யப்பட்டது.
அந்த நகருக்கு அருகில் உள்ள இயற்கை வனப்பகுதியில் புதைப்பதற்காக அந்த முதலையின் சடலம் அனுப்பிவைக்கப்பட்டது.

