சீனா, அடுத்த சில நாட்களில் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பவிருக்கிறது.
'சாங்-5' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம் நிலவில் இறங்கி கற்களை சேகரித்து பின்னர் பூமிக்குத் திரும்பும் என்று சீனாவின் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் நிலவில் கற்களை சேகரித்து பூமிக்குத் திரும்பிய 3வது நாடாக சீனா இருக்கும்.
இதற்கு முன் அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்கலத்தை அனுப்பி நிலவிலிருந்து கற்களை சேகரித்துள்ளன. நிலவு உருவானது பற்றி அங்கிருந்து கொண்டு வரப்படும் கற்கள் மூலம் ஆராயப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சீனாவின் நிலவுப் பயணம் அதற்கே சோதனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 1959ல் ரஷ்யாவின் விண்கலம் முதல் முறையாக நிலவில் தரையிறங்கியது.
அதன் பிறகு ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் நிலவில் விண்கலத்தை இறக்கியுள்ளன.
அமெரிக்கா தனது அப்போலோ திட்டத்தின் மூலம் நிலவில் மனிதர்களையும் இறக்கி மனிதகுலத்தின் காலடியை பதிக்கச் செய்தது. 1969 முதல் 1972 வரையில் அமெரிக்கா மொத்தம் 12 விண்வெளி வீரர்களை நிலவில் இறக்கி 382 கிலோ எடையுள்ள பாறை களையும் மண்ணையும் பூமிக்குக் கொண்டு வந்துள்ளது.